Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“இப்போ 2 இடத்துல வந்தாச்சு”… அம்மா மினி கிளினிக்… திறந்து வைத்தார் போக்குவரத்து துறை அமைச்சர்…!!

அம்மா மினி கிளினிக்கை இரண்டு இடங்களில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திறந்து வைத்துள்ளார்.

கரூர் மாவட்டத்திலுள்ள  காருடையாம்பாளையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்துள்ளார். இந்த திறப்பு விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் மார்க்கண்டேயன் தலைமை தாங்கி, ஊராட்சிமன்றத் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்று, ஒன்றிய குழு தலைவர் குழந்தைசாமி முன்னிலை வகித்துள்ளார்.

புஞ்சைகாளிகுறிச்சியில் அம்மா கிளினிக் திறப்பு விழாவை  ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரூபாய் 88.68 லட்சத்தில் உடையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம், சமுதாயக்கூடம், உயர் கோபுர மின் விளக்கு, தானிய களம், அங்கன்வாடி கட்டிடம் ஆகிய பணிகளுக்காக பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் டாக்டர் லாவண்யா, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், வட்டார மருத்துவ அலுவலர் அருள்குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செந்தில், அரசுத்துறை அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

Categories

Tech |