“சாதித்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று ஜடேஜா சஞ்சய் மஞ்சரேகருக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த கிரிக்கெட் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வர்ணனையாளர்களாக உள்ளனர்.இதில் இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேகரும் இடம் பிடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியிலும் வர்ணனையாளர்களாக இருந்துள்ளார். அப்போதிலிருந்து இப்பொது வரை இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
இவர் வர்ணனையின் போது தனது சொந்த விருப்பு வெறுப்புகளை பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஐபிஎல் தொடரில் அடிக்கடி தோனியை குறித்து விமர்சனங்கள் செய்து வந்த இவர் தற்போது உலக கோப்பையிலும் தோனியை விடாமல் வெறுப்பு வார்த்தைகளை வீசி வருகிறார். இதனால் தோனி ரசிகர்கள் மஞ்சரேகரை சமூகவலைத்தளங்களில் திட்டி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரசிகர்கள் மஞ்சரேகரை வர்ணனையாளரில் இருந்து நீக்கவேண்டும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜடேஜா இதுவரையில் உலகக்கோப்பையில் அணியில் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்ற பிறகு ஜடேஜாவை அணிக்கு கொண்டு வருவதை பற்றி சஞ்சய் மஞ்சுரேகரிடம் கேள்வி கேட்ட போது, ஜடேஜா ஒரு “துண்டு துக்கடா வீரர்” என்று குறிப்பிட்டார். ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் ஒரு பவுலர். ஆனால் ஒரு நாள் போட்டியில் அவருக்கு பதிலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது சுழற்பந்து வீச்சாளரை தான் தேர்வு செய்திருப்பேன். நான் கேப்டனாக இருந்தால் ஜடேஜாவை அணியில் சேர்க்க மாட்டேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தனது ட்விட்டரில் இதற்கு பதிலளித்த ஜடேஜா, “நான் நீங்கள் விளையாடிய விளையாட்டை காட்டிலும் இரு மடங்கு விளையாடியிருக்கிறேன். இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். சாதித்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் வார்த்தை மலம்” போதும் நிறுத்துங்கள் ” என்று கடுமையாக சாடியுள்ளார்.
Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.@sanjaymanjrekar
— Ravindrasinh jadeja (@imjadeja) July 3, 2019