Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடிய சாக்ஷி‌ அகர்வால்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை சாக்ஷி அகர்வால் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் டெடி ,சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் ‘புரவி’ என்ற படத்தில் போராளியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் காதலர் தினத்தை ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.

 

அந்த குழந்தைகளுக்கு உணவு மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி தன் அன்பை வெளிப் படுத்தியுள்ளார் . இதுகுறித்து நடிகை சாக்ஷி ‘காதல் எப்படி வேண்டுமானாலும் வரலாம் . அதற்கு விதிகளோ, எல்லைகளோ கிடையாது . என்னைப் பொறுத்த வரையில் அன்பை வெளிப்படுத்துவது தான் காதலர் தினம் . இந்த வருடம் ஆதரவற்ற குழந்தைகளுடன் நான் காதலர் தினத்தை கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறியுள்ளார் . ஆதரவற்ற குழந்தைகளுடன் நடிகை சாக்ஷி அகர்வால் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

Categories

Tech |