நடிகை ஸ்ரீபிரியா தனது பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் சுமார் 200 திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம் ,தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் . மேலும் நட்சத்திரம், நீயா ஆகிய படங்களை தயாரித்துள்ள இவர் ‘திரிஷ்யம்’ தெலுங்கு ரீமேக் உட்பட 6 படங்களை இயக்கியுள்ளார் .
A walk with my grandson😃 pic.twitter.com/zjWgfkr7Hm
— sripriya (@sripriya) February 13, 2021
நடிகை ஸ்ரீபிரியா கடந்த 1988ஆம் ஆண்டு நடிகை லதாவின் சகோதரரான ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் . இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா தனது பேரனுடன் வாக்கிங் செல்லும் க்யூட்டான புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .