டிக் டாக் செயலியை அரசாங்கம் தடை செய்த பிறகு அந்நிறுவனம் இந்தியாவில் இருக்கும் அதன் சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளது.
டிக் டாக் என்பது சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்தின் பொழுதுபோக்கு செயலி. இதன் மூலம் லட்சக்கணக்கான பேர் பாட்டு, நடனம் என பொழுது போக்கி வந்தனர். இந்த நிலையில் அந்த செயலில் சேகரிக்கப்படும் பயனர் விவரங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி மத்திய அரசு அதனை தடை செய்தது. சீனா-இந்தியா இடையிலான உறவு, எல்லை பிரச்சினை ஆகியவை டிக்டாக் நிறுவனம் புத்துயிர் பெற வாய்ப்பற்ற சூழலை உருவாக்கியது.
இதையடுத்து வேறு வழியின்றி அந்நிறுவனம் இந்தியாவில் இருக்கும் தனது சொத்துக்களை விற்க பேச்சு நடத்தி வருகிறது. யூனிகான் என்று நிறுவனத்துக்கும், டிக் டாக் நிறுவனத்துக்கும், ஜாப் பங்க் குழுமம் மூலம் பேச்சு நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு விற்பனை செய்வது என்றால் மத்திய அரசின் ஒப்புதல் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.