நடிகர் சிம்பு தனது நாயுடன் பேசும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் மாநாடு ,பத்துதல ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகிறது . இந்நிலையில் நடிகர் சிம்பு காதலர் தினத்தை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு தன் முன்னே அமர்ந்து இருக்கும் நாயிடம் ‘நான் மட்டும் தனியா இருக்கிறேன் ,நீ மட்டும் ஜாலியா இருந்தா அது நியாயம் கிடையாது.
This 😂😂😍😍 @SilambarasanTR_ @MahatOfficial pic.twitter.com/fAY9Tjh1ZB
— STR Silambarasan (@Actor_SimbuFC) February 14, 2021
நீ இரவெல்லாம் உட்கார்ந்து யோசி சிம்புவுக்கு கல்யாணம் ஆக வேண்டும், அப்போது தான் நாம வாழ்க்கையில் ஜாலியா இருக்க முடியும் . இல்லையென்றால் இருக்க முடியாது . என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா? ஏதாவது சொல்லு மேன் . ஓ நீ கேர்ள் அல்லவா ?’ என்று புலம்புகிறார் . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது .