திருப்பதிக்கு பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டம் துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.ஆர்.சி.டி.சி ஏழுமலையான் தரிசன பேக்கேஜ் திட்டமானது மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. அதாவது ரயில், பேருந்து சேவையை தொடர்ந்து பாலாஜி தர்ஷன் என்ற பெயரில் விமான பயண திட்டமும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் நபர் ஒருவருக்கு டெல்லி, திருப்பதி 2 மார்க்கத்திலும் விமானங்கள், உணவு, தங்கும் விடுதி, திருச்சானூர், திருமலை, காளஹஸ்தி கோவில் தரிசன கட்டணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய இந்த பயணத்திற்கு 16,535 ரூபாய் முதல் செலுத்தி பயணிக்கலாம்.
இவ்வாறு பக்தர்களுக்காக இயக்கப்படும் விமானத்தில் காலை 6.50 மணிக்கு புறப்பட்டு காலை 9:20 மணிக்கு திருப்பதியைச் அடைகின்றனர். இதனை அடுத்து அங்கிருந்து சந்திரகிரி கோட்டை, காளஹஸ்தி, பத்மாவதி தாயார் கோவில் போன்ற இடங்களுக்கு பேருந்து மூலம் பயணிகளை அழைத்து செல்கின்றனர். அதன் பின் திருப்பதி அறையில் இரவு தங்கியிருந்து மறுநாள் அதிகாலை திருமலைக்குச் சென்று ஏழுமலையானை விரைவு தரிசனத்தில் வழிபட்ட பின்னர், விமானம் மூலம் திருப்பதியில் இருந்து டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.