Categories
உலக செய்திகள்

பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா…? எந்த நிறுவனத்தின் தயாரிப்பு… வெளியான முக்கிய தகவல்…!!

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியானது பிறந்த குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக அளவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா இணைந்து தயாரித்துள்ள கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும் இந்த தடுப்பூசியானது விலை மலிவாகவும் விநியோகிக்க எளிதாகவும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்தியா, அர்ஜென்டினா டொமினிகன் குடியரசு, எல் சால்வடோர், மெக்ஸிகோ போன்ற பல நாடுகளும் அஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளன.

மேலும் இந்த தடுப்பூசி நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுவதால் அடுத்ததாக 6 முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை அளிப்பதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனகா சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, அடுத்தகட்டமாக தடுப்பூசி பரிசோதனை அதிகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து 6 முதல் 17 வயதுடைய தன்னார்வலர்கள் சுமார் 300 நபர்களுக்கு இந்த மாதத்தில் ஆக்ஸ்ப்போர்ட், லண்டன் சவுத்தாம்ப்டன் மற்றும் பிரிஸ்டல் போன்ற இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருப்பதாக கூறியுள்ளது.

Categories

Tech |