Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய், அடுத்த படம்… வெளியான இன்ப அதிர்ச்சி…!!!

நடிகர் விஜய்யை வைத்து அவரது மகன் சஞ்சய் திரைப்படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். அந்தப் படம் கடந்த மாதம் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் திரையுலகில் அதிக வசூலைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து நடிகர் விஜய்யின் அடுத்த படம் என்னவென்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யை வைத்து அவரது மகன் சஞ்சய் திரைப் படம் ஒன்றை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் இயக்குனருக்கான படிப்பை முடித்துள்ள சஞ்சய், விஜய்யிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், இது குறித்து விஜய் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சஞ்சய் சில குறும்படங்களை இயக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |