மல்யுத்த பயிற்சி மையத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் புள்ள ரோத்தக் நகரில் மல்யுத்த பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். அதோடு பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையில் இந்த தாக்குதலானது கோபத்தில் நடத்தப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மல்யுத்த பயிற்சி மையத்தின் சுக்விந்தர் சிங் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதுகுறித்து ரோத்தக் டி.ஜி.பி ராகுல் சர்மா கூறும்போது, இந்த வழக்கின் முதல் குற்றவாளியான பயிற்சியாளர் சுக்விந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இதன் காரணத்தினாலேயே அவரை பணியிலிருந்து நீக்கிய அதிகாரி உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாகவும், தேடப்பட்டு வரும் அந்த முக்கிய குற்றவாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.