லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சித்தூரில் வசித்து வரும் 18 பேர் அஜ்மீர் நோக்கி டெம்போ வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேன் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ராதாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக டெம்போ வேன் அவ்வழியாக வந்த லாரி மீது மோதி விட்டது. இந்த விபத்தில் டெம்போ வேனில் பயணம் செய்த 14 பேர் இரு வாகனங்களுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.