ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஜப்பானில் உள்ள நமீ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது நமீ நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் கடல் அலைகள் உயரமாக எழும்பும் என கூறியுள்ளனர். ஆனால் இதனால் சுனாமி எதுவும் ஏற்படாது என சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.