பிரிட்டனில் டெலிவிஷன் ஒன்றில் வன்முறையை தூண்டும் வகையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப பட்டதால் அபராதம் விரிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் கேடிவி என்று அழைக்கப்படும் கல்சா டெலிவிஷன் கடந்த 2018 ஆம் ஆண்டு பகா அண்டு ஷெரா என்ற இசை நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அதில், சீக்கியர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக இருந்தது. மேலும் முன்னாள் பிரதமர் இந்திராவின் படத்துடன் இந்தியாவுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் காட்சிகள் இருந்தது. அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு பன்தக் மஸ்லி என்ற விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், பயங்கரவாத அமைப்பான பப்பர் கல்சாவையும், வன்முறையையும் ஆதரிப்பது போன்று ஒளிபரப்பப்பட்டது. ஆகையால் இதுகுறித்து தொலைக்காட்சி ஒளிபரப்பு கட்டுப்பாட்டு அமைப்பிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரணை செய்த தொலைக்காட்சி நிர்வாகம் வன்முறையை தூண்டி நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய கேடிவிக்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.