நாம் தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துகிறோம். அந்த டூத்பேஸ்ட்டில் கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை என்று பல கோடுகள் இருக்கும். இதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருப்போம். அந்த கோடுகளுக்கு அர்த்தம் என்ன என்பது தெரியுமா? யோசனை செய்திருக்க மாட்டோம். டூத்பேஸ்ட் பின்புறம் உள்ள வண்ண கோடுகளின் அர்த்தம் குறித்து இதில் தெரிந்து கொள்வோம். அனைத்து டூத்பேஸ்ட் வகைகளிலும் இந்த வண்ணம் இடம்பெற்றிருக்கும்.
இந்த பேஸ்ட் ரசாயன மற்ற தா, முழுக்க முழுக்க ரசாயனத்தால் ஆனதா என்பதை இது குறிக்கும்.
டூத்பேஸ்ட்டில் கருப்பு நிற அடையாளத்தை கண்டால் அதில் நிறைய ரசாயனங்கள் உள்ளது என்றும், முற்றிலும் ரசாயனங்களால் ஆனது என்று பொருள்.
சிவப்பு நிற அடையாளம் இருந்தால் இயற்கை விஷயங்களையும் ரசாயனங்களும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
நீல நிற கோடு இடம் பெற்றிருந்தால் அது இயற்கையான விஷயங்களுக்கு மேலதிகமாக மருந்துகளும் உள்ளது என்று அர்த்தம்.
பச்சை நிற கோடு என்றால் டூத் பேஸ்ட் தயாரிப்புக்கு இயற்கை பொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பொருள்.