நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கவும், அவரின் சமூக வலைத்தள கணக்கை முடக்கவும் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து நேற்று சென்னை வருகை தந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர். அங்கு பல்வேறு நலத் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை ஒட்டி சமூக வலைத்தளங்களில் “go back modi” என்ற ஹேஸ்டேக் வைரல் ஆகி வந்தது. அதற்கு நடிகை ஓவியா ஆதரவு தெரிவித்து, அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் இந்த கருத்தை பதிவிட்டார்.
அதனால் நடிகை ஓவியா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிபிஐயிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓவியாவின் சமூக வலைதள கணக்கையும் முடக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.