தேவேந்திரகுல வேளாளர் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கரூரில் பிரதமர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவேந்திரகுல வேளாளர் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர். 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கரூரில் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சங்கம் இணைந்து பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடியுள்ளனர்.
தேவேந்திர குல வேளாளர் அரசாணையை நாடாளுமன்றத்தில் உடனடியாக சட்டமாக நிறைவேற்ற உறுதியளித்த பாரத பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த அரசாணையை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்த தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு கோஷங்கள் எழுப்பினர்.