பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ்ஸில் காஜல்அகர்வால் தனது கணவருடன் சாப்பிடும் போட்டோவை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை வைரலாகி வருகிறது .
நடிகை காஜல் அகர்வால் தனது ட்விட்டர் பக்கத்தில் பொள்ளாச்சியில் உள்ள சாந்தி மெஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், கடந்த 27 வருடங்களாக இவர்கள் நல்ல சுவையான உணவை தந்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த ஒன்பது வருடங்களாக இங்கு வாடிக்கையாளராக உள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.
அங்கு சென்று தான் உணவருந்தும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மிகச் சிறிய கடையாக இருந்தாலும் இந்த மெஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமில்லாது காஜல் அகர்வாலின் தெலுங்கு ரசிகர்களும் இந்த மெஸ்சை எங்கு உள்ளது என்று தேடி வருகின்றனர்.