Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேட்கல…. கேட்கல…. சத்தமா…. பிகில் விஜய் போல…. மெர்சலாகிய விராத் கோலி ….!!

கேப்டன் விராட்  கோலி சென்னை ரசிகர்களிடம் விசில் அடிக்க சொன்ன காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது .முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களை குவித்து இருந்தது .இதை தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 95.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை இங்கிலாந்து அணி தொடங்கியது .இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் இழக்க  தொடங்கியது.

 

ரசிகர்கள் அதனால் மிகுந்த உற்சாகமானார். கேப்டன் விராட் கோலியும் உற்சாகத்தால் ரசிகர்களை விசில் அடிக்க சொல்லி கை சைகையால் கேட்டார். ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்கல என்று கூறியதால் ரசிகர்கள் அதிகமாக  உற்சாகம் அடைந்தார்கள். ஸ்டேடியம்  முழுவதும் அனைவரும் உற்சாகத்தால் விசில் அடித்து கைதட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்தார்கள்.

இந்த காட்சியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டது. அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. விஜயின் பிகில் படத்தில் பயிற்சியாளர் விஜய் கால்பந்து பயிற்சியில் கேட்கல…. கேட்கல…. சத்தமா என சொன்னதை ரசிகர்கள் நினைவு கூர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |