Categories
தேசிய செய்திகள்

மேடையில் மயங்கி விழுந்த முதலமைச்சர் – பரபரப்பு…!!

முதலமைச்சர் விஜய் ரூபவானி மேடையில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, வதோதராவில் உள்ள நிஜாம்புரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் ருபானி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கியபோதே உடல்நிலை சரியில்லாதது போல தோன்றினார். முதலில் வதோதராவில் உள்ள தர்சாலி, கரேலிபவுக் ஆகிய பகுதிகளில் உரையாற்றிவிட்டு நிஜாம்புராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் விஜய் ரூபானி குஜராத் மணிலா பகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு மேடையில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

Categories

Tech |