விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சூழியல் ஆய்வாளர் கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த போராட்டம் உலக அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கியதாகவும், ஷேர் செய்ததாகவும் பெங்களூரை சேர்ந்த சூழியல் ஆய்வாளர் திஷா ரவி கைது செய்யப்பட்டார். இதற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவான டுவிட்டை ரிவீட் செய்ததற்காக இளம்பெண்ணை கைது செய்திருப்பது கருத்து, சுதந்திரத்திற்கு எதிரானது என்று பதிவிட்டுள்ளார்.