நாடு முழுவதும் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எப்படிப் பெறுவது என பார்க்கலாம் வாருங்கள்.
நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் இன்று முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி உங்களது வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் எப்படி பெறலாம் எனப் பார்க்கலாம். தற்போது அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் சாலை போக்குவரத்து ஆணையம் அலுவலகங்களிலும் உள்ள NHAI விற்பனை பகுதிகளில் ஃபாஸ்ட்டேக் வழங்கப்படுகிறது.
மேலும் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமும் பெறலாம்.எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் தற்போது ஃபாஸ்டேக்கை ஆதரித்து வருகின்றன. இந்த வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால் வங்கியால் அமைக்கப்பட்டுள்ள POS இல் இருந்து ஃபாஸ்டேக்கை பெற்றுக்கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் உங்கள் மொபைலில் மை ஃபாஸ்டேக் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து ஃபாஸ்டேக்கைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது போன்பே, பேடிஎம், அமேசான் போன்ற செயலிகளிலும் ஃபாஸ்டேக் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உங்களது ஆர்சி புக் நகல் மற்றும் வாகன பதிவு எண் ஆகியவற்றை நீங்கள் உள்ளிட்டால் போதுமானது. இதுவே வங்கியில் நேரடியாக சென்று ஃபாஸ்டேக் பெறும் போது, உங்கள் வாகனத்தின் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பான் அட்டை, முகவரி மற்றும் அடையாள ஆதாரம் ஆகியவற்றை வழங்கவேண்டும்.