Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னையில் பிரிந்து சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் இரு குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்து வந்தவர் வினோத் வயது 32 மற்றும் கவிதா வயது 27  இவர்களின் மகன்கள்கவின் வயது 3 மற்றும் சக்தி வயது 1. வினோத் எலக்ட்ரீசியன் வேலை செய்பவர். சில நாட்களுக்கு முன் வினோத் மற்றும் கவித ஆகியோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது எனவே இருவரும் சண்டைபோட்டு கவிதா தன் இரு மகன்களுடன் பொன்னேரியில் உள்ள  தாய் வீட்டிற்கு சென்றார்.

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை நினைத்து மன சங்கடத்தில் ஆழ்ந்த கவிதா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த கவிதாவின் பெற்றோர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். கவிதா இறந்த பிறகு தன் குழந்தைகளை வினோத் கொருக்குப்  பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கவிதா இழந்த சோகம் வினோத்தின் மனதை விட்டு அகலவில்லை .

எனவே வேலைக்கும் செல்ல முடியாமல் குழந்தைகளையும்  நன்றாக பார்த்துக்கொள்ளமல்  சிரமப்பட்டு வந்தார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் வினோத் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை எனவும் குழந்தைகளையும் வெளியே காணவில்லை எனவும் வீட்டின் அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து அருகில் உள்ள வினோத்தின் தாய் மற்றும் தம்பியிடம் கூறினார்.

அவர்கள வந்து கதவை தட்டியபோது கதவு  திறக்கப்படவில்லை. எனவேஅதிர்ச்சியடைந்த  வினோத்தின் தம்பி கதவை உடைத்தார். வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியினல்  தூக்கில் தொங்கிய நிலையில் வினோத்தும் மற்றும் மகன்கள் இருவரும் மெத்தையில் இறந்து கிடந்தனர். இதைப் பார்த்த வினோத்தின் தாய் மற்றும் தம்பி அதிர்ச்சி அடைந்தார்கள்.

இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு ஆர் கே நகர் போலீஸ் மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு நடந்த விசாரணையில் வினோத் மனைவி இறந்த துக்கத்தில் தன் இரு குழந்தைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்தது தெரியவந்தது. கவின் மற்றும் சக்தி உடம்பில் எந்த காயமும் இல்லாததால் வினோத் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என்று  தெரியவருகிறது.

ஆனால் பிரேத பரிசோதனையின் முடிவில்தான் குழந்தைகள் இருவரும் எவ்வாறு இருந்திருக்கக்கூடும் என்பது தெரியவரும் என்று போலீஸ் விசாரணையில் கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் மிகுந்த சோகத்தையும் அளித்துள்ளது.

 

 

 

Categories

Tech |