இந்திய வம்சாவளி சிறுமியின் தற்கொலை விவகாரம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி இந்தியா வம்சாவளி சிறுமியான உமா குப்தா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து இப்போது நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது .இவர் கல்விநிலையத்தில் தொடர்ந்து கேலி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார். தாம் கேலி, கிண்டலுக்கு ஆளாகி நிகழ்வுகளை எல்லாம் ரகசியமாக கைப்பட எழுதியுள்ளார் .மேலும் அந்த கடிதத்தில் மார்ச் மாதத்தில் அவருக்கு தற்கொலை எண்ணம் வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் என்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. அக்டோபர் 2018 எழுதிருந்த கடிதத்தில் தனது குடும்பம் ,நண்பர்கள் தான் அவருக்கு மிகவும் பிடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 2018 உமாவின் தூரத்து சொந்தமான ஒருவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மனதளவில் அவரை அதிகமாக காயப்படுத்தியதாக கூறப்படுகிறது .இந்த சம்பவம் குறித்து அவரின் நடவடிக்கைகளை கவனித்த பெற்றோர்கள் அவரை கவனமுடன் கண்காணித்து வந்துள்ளனர். இதற்கிடையில் டிசம்பர் 2018 ஆம் ஆண்டு தலையில் பலத்த காயத்துடன் தெருவில் விழுந்து கிடந்துள்ளார் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அந்த நிலையிலும் கூட செத்துவிட வேண்டும் என்று கதறி அழுது உள்ளதாக விசாரணையில் தெரியப்படுகிறது. இந்நிலையில் பெற்றோர்களுடன் விருந்து ஒன்றிற்கு மார்ச் 2-ஆம் தேதி வந்ததாகவும் மிகவும் சந்தோஷமாகதான் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
ஆனால் விருந்து நிகழ்ச்சியின் நடுவிலே அவரின் நடவடிக்கை மாறியதாகவும் பலமுறை கழிவறையிலும் ,சமையலறையிலும் அழுது கொண்டதாகவும் சிலர் சாட்சி கூறுகின்றனர் . அன்று மார்ச் 2ஆம் தேதி 2019ஆம் ஆண்டு இரவு சுமார் 10 மணி அளவில் டிட்ஸ்பிரி ரயில் நிலையத்தில் ரயிலுக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உமாவின் இந்த மறைவை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் தங்கள் சந்தோஷத்தை மொத்தமாக தொலைத்து விட்டோம் என்றும் உமாவின் பெற்றோர்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறோம் என்றும் கூறுகிறார்கள் .உமா குப்தா பயின்ற கல்வி நிலையத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளாகும் மாணவர்கள் ரகசியமாக போலீசில் புகார் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.