எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வீடு தேடி வந்து வங்கி சேவைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் எஸ்.பி.ஐ. நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வீடிதேடி வந்து வங்கி சேவைகளை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் படி உங்கள் வீட்டிற்கே நேரடியாக அதிகாரிகள் வந்து வங்கி சேவைகளை வழங்குவார்கள். இதில் பணம் எடுப்பது, புதிய காசோலை விண்ணப்பிப்பது, காசோலைகள் கொடுப்பது, டிராஃப்ட் போன்ற குறிப்பிட்ட சேவைகளை வழங்குகிறது. உங்களது டோர் ஸ்டெப்பில் வங்கி சேவைகளை நீங்கள் பெற விரும்பினால், 1800 1037 188 அல்லது 1800 1213 721 என்ற எண்களுக்கு அழைத்தால் போதும் சேவை அதிகாரி உங்கள் வீடு தேடி வருவார். மேலும், http://bank.sbi என்ற இணையதளத்தையும் நீங்கள் அணுகலாம்.