Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே எச்சரிக்கை…! காணாமல் போகும் செயற்கைகோள்கள் ..!! மிரட்டும் பெர்முடா முக்கோணம் ..!!

பெர்முடா முக்கோணம் பகுதியில் கப்பல் ,விமானம் காணாமல் போனதை போல விண்ணில் இருக்கும் செயற்கை கோளும்  காணாமல் போய் உள்ளது விஞ்ஞானிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது .

பெர்முடா முக்கோணம் என்பது அமெரிக்காவில் உள்ள பெர்மூடா, புளோரிடா ,புவர் டோ ரிக்கோ ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட இடத்தில் இருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி தான் என்று கூறுகிறார்கள் .பூமியில் இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மம் இன்று வரை விலகவில்லை. இந்தப் பகுதியில் உள்ள  மர்மம்  சுமார் 50,000 சதுர மைல் அளவிற்கு பரவியுள்ளதாகவும், பல ஆண்டு காலங்கள் விலகாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது .மேலும் இந்த பகுதிக்கு வரும் கப்பல் மட்டுமல்ல விமானங்கள் கூட காணாமல் போகின்றது.

இந்த பெர்முடா முக்கோணத்தினால்  கப்பல் ,விமானங்கள் காணாமல் போவது போல் விண்வெளியில் உள்ள செயற்கைகோளும் பூமிக்கு இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுவதாக  கூறப்படுகிறது. இதனை விண்வெளியின் பெர்முடா முக்கோணம் என்றும் தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பெர்முடா முக்கோண பகுதி மேற்கு நோக்கி விரிவடைந்து நகர்கிறது. 2019 ஆம் ஆண்டை விட 10% அதிகமாக வரக்கூடிய 5 ஆண்டுகளில் பரவும் என்று எச்சரித்துள்ள ஆய்வாளர்கள் தீவிரமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர் .

Categories

Tech |