நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு காரணமாக இருந்த டிரம்ப் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நாடாளுமன்ற வளாகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் இருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது டிரம்பிற்கு ஆதரவாக அவரது குடியரசுக் கட்சியினர் பலர் வாக்களித்தனர்.
சிலர் அவருக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் 57-43 என்ற அடிப்படையில் டிரம்ப் இந்த வழக்கில் இருந்து அதிஷ்டவசமாக விடுவிக்கப்பட்டார். அதன்பின் டிரம்ப் கூறியதாவது, அமெரிக்காவின் பெருமையை நிலைநாட்டும் பணிகளை இனி நான் தொடங்கப் போகிறேன். அதற்கான நடவடிக்கைகள் மற்றும் பயணங்களை குறித்து அடுத்த மாதம் தெரிவிக்கிறேன் என்று அறிவித்தார்.
ஆகவே டிரம்ப் இனி தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் அவரோ,அவரது குடும்ப உறுப்பினரோ போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.