குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் எந்த வித பலனும் இல்லை என்று கூறி சுவிட்சர்லாந்தில் 2 குழந்தைகளின் தந்தை ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் மண்டலத்தில் ஐந்து மற்றும் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மண்டல நிர்வாகம் கூறியது. இதுதொடர்பாக கடந்த வார வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், முகக்கவசம் அணிவது மூலமாகத்தான் கொரோனவை தடுக்க முடியும் என்றும் மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என்றும் மண்டல நிர்வாகம் கூறியுள்ளது . அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி முதல் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் wurenlos சேர்ந்த Steven Schraner என்பவர் குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் எந்தவித பலனும் கிடைக்கப்போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். WHO கூற்றுப்படி, குழந்தைகள் முகக்கவசம் அணிவதால் அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்றும் அதனால் பலன் கிடைத்ததாக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதையும் அவர் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் மண்டல நிர்வாகம் இந்த முடிவை மாற்றும் வரை தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வேன் என்றும் Steven Schraner கூறியுள்ளார்.