ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து தன்னை நீக்கியதற்கு விளக்கம் தராவிட்டால் ரஜினி முன்பு தீ குளிப்பேன் என ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கடந்த டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக ரஜினி அறிவித்தார். ஆனால் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், இனி நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று கூறினார். அதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.
இந்நிலையில் அரசியலிலிருந்து விலகுவதாக ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லை என பொய் நாடகமாடி மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நீக்கப்பட்ட குமரி மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், “ரஜினி, எந்திரன் படத்தை 800 கோடிக்கு விற்க தான் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார்” எனவும் அவர் கூறியுள்ளார். மற்றொரு நிர்வாகியை சதீஷ் பாபு, தன்னை மக்கள் மன்றத்திலிருந்து நீக்கியதற்கு விளக்கம் தராவிட்டால் ரஜினி முன் ராகவேந்திரா மண்டபத்தில் தீ குளிப்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.