Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“காணாமல் போன இடங்களை மீட்டுத் தாருங்கள்”… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்… பேச்சு வார்த்தையில் அரசு அதிகாரிகள்…!!

கரம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிறை கிராமத்தில் 1500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட புதுக்குளம், மயான கொட்டகை மற்றும் அரசுத் தொடக்கப் பள்ளிக்குச் சொந்தமான இடம் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு கிராம மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கிராம மக்களும் கரம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “கட்டுவான் பிறை கிராமத்தில் காணாமல் போன அரசு பள்ளியின் இடம், மயானம் கொட்டகை, புதுக்குளம் ஆகியவற்றை கண்டுபிடித்து மீட்டு தர வேண்டும்” என கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கிருஷ்ணன், கருப்பையா ஆகியோர் தலைமை தங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பரமக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் பள்ளி இடத்தில் வழங்கப்பட்ட முறைகேடான பட்டா ரத்து செய்யப்படும், மயான கொட்டகை இடித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், குளம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |