Categories
உலக செய்திகள்

தப்பிய டொனால்ட் டிரம்ப்…! மீண்டும் வன்முறை… அதிபராக வர அதிக வாய்ப்பு ?

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப்பின் குற்றச்சாட்டு விசாரணை முடிவில் முன்னாள் குடியரசு கட்சி அதிபரை காப்பாற்றியதால் அமெரிக்கா செனட் டிரம்பை விடுவித்தது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் ஒருவருடத்தில் இரண்டாவது குற்றச்சாட்டுக்கான  விசாரணை முடிவுக்கு வந்தது. விசாரணையில் குடியரசு கட்சி  முன்னாள் அதிபரை காப்பாற்றியதால் டிரம்பை  அமெரிக்கா செனட் சனிக்கிழமை அன்று விடுவித்தது. டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடத்திய கொடூர தாக்குதலில் அவருடைய பங்கு குறித்த குற்றச்சாட்டை அவரது குடியரசுக் கட்சியினர் தடுத்துவிட்டனர்.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான குற்றச்சாட்டில் அமெரிக்க செனட் வாக்கெடுப்பில் 57-43 என்ற எண்ணிக்கையில் வாக்குகள் பதிவானதால்  தப்பிவிட்டார். இல்லையெனில்  தண்டனை பெற்றிருப்பர். மேலும் தண்டனையை பெற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற அவபெயரையும் பெற்றிருப்பார். ட்ரம்பை தண்டிக்கத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இந்த குற்றச்சாட்டு விசாரணையில கிடைக்காததால் ஐந்து நாளாக தொடர்ந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்தது. ட்ரம்புக்கு தண்டனை கொடுப்பதற்காக குடியரசுக் கட்சியினர் 50 செனட்  உறுப்பினர்களில் 7 பேர் ஆதரவாக இருந்தனர்.

டிரம்ப் தனது ஆதரவாளர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஊக்குவித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது .இதனால் ஏற்பட்ட வன்முறையில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்தனர். ஜனநாயக கட்சியினர் டிரம்ப் மறுபடியும் பொது அலுவலகத்தில் பணியாற்றுவதை தடுப்பதற்காக வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்று நம்பினர். இதில் டிரம்ப்புக்கு எதிரான வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததால் அவர், எதிர்காலத்தில் மீண்டும்  பதவி வாய்ப்பு கிடைக்கும் என்பதால் டிரம்ப் வன்முறையை ஊக்குவிக்க தயங்க மாட்டார் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் டிரம்ப் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |