தமிழக டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 2000 ஊதிய உயர்வு வழங்கப்படுமென்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மர்க் ஊழியர்கள் , விற்பனையாளர்கள் , உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை சார்பில் அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ள அறிவிப்பில் , டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியமாக 2000 உயர்த்தி வழங்கப்படும். இதனால் 36, 056 ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டுக்கு 62.53 கோடி கூடுதலாக ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.