விலை உயர்வை குறைத்து மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்து சென்றதன் பரிசு மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது தான் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே மானியத்துடன் எல்பிஜி சிலிண்டர் விலை ரூபாய் 100 உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏன் இந்த கொடூரம்? மக்கள் நிம்மதியாக வாழ வரிகளை குறைத்து விலை உயர்வை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.