Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

உன்கூட இருக்கணும்னா… ” எனக்கு 50 பவுன் நகை… 10 லட்சம் பணம் வேணும்”… காதல் கணவன் கைது..!!

வரதட்சனை கொடுக்க வில்லை என்றால் ஆபாச வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கணவரை  கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கௌதமன் என்பவர் கல்லூரி படிக்கும்போது அதே பகுதியை சேர்ந்த சாந்தி என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் படிப்பு முடித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். திருப்பூர், பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கௌதமன் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விவகாரம் சாந்தியின் பெற்றோருக்குத் தெரியாது. இருவரும் சென்னை முகப்பேரில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

சில நாட்களுக்குப் பின்பு சாந்தியிடம் 5 சவரன் நகை மற்றும் 75 பணம் பெற்றுக்கொண்டு கௌதமன் நாமக்கல் சென்றுள்ளார். சாந்தி தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் இணைப்பை துண்டித்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி கௌதமின் பெற்றோருக்கு போன் செய்யவே கௌதமின் தாய் தகாத வார்த்தையால் அவரைத் திட்டியுள்ளார் . அதன்பின் சாந்திக்கு போன் செய்த கௌதம் உன்னுடன் உல்லாசமாக இருக்கத் தான் திருமணம் என்னும் நாடகமாடினேன்.

உன்னுடன் குடும்பம் நடத்த வேண்டுமென்றால் உங்கள் வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் 10 லட்சம் வரதட்சணை வாங்கி கொடு என்று மிரட்டியுள்ளார். இல்லை என்றால் நாம் உல்லாசமாக இருந்த வீடியோவை இணைய தளத்தில் பதிவிட்டு விடுவேன் என்று கூறியுள்ளார். தான்  ஏமாற்றத்தை உணர்ந்த சாந்தி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், பின்னர் கௌதம் தன் குடும்பத்துடன் தலைமறைவாகி உள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் போலீசார் கௌதமனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |