தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய புவனேஸ்வரி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார்.
புகாரின் பெயரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு வீட்டின் கூரையின் மேல் உயிருடன் ஒரு குழந்தையை மீட்டனர். ஆனால் மற்றொரு குழந்தை அகழி ஒன்றின் அருகில் சடலமாக மீட்கப்பட்டது. இந்நிலையில் அதிகாரிகள் புவனேஸ்வரியின் குற்றச்சாட்டை சந்தேகிக்கின்றனர்.
ஏனென்றால் குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்றிருந்தால் குழந்தையின் உடலில் கீறல்கள் தென்படும். கை,கால்களில் விலகல் ஏற்பட்டிருக்கும். ஆனால் குழந்தைகளுக்கு அப்படி எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆகவே புவனேஸ்வரியின் புகாரில் சந்தேகம் இருப்பதால் நடந்தவற்றை கண்டுபிடிப்பதற்கு போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.