வீட்டு சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களில் சமையல் எரிவாயு விலை உருளைக்கு 215 .50 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் மானியம் ரூ 24.5 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏழை நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வீட்டு சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.