Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கெட்ட கொழுப்பை குறைத்து… அதனால் உருவாகும் கிருமிகளை கொல்லணுமா ? அப்போ இந்த கிராமத்து ரெசிபி ஒண்ணு போதும்..!!

பச்சை சுண்டைக்காய் கார குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

பச்சை சுண்டைக்காய்  – கால் கப்
சின்ன வெங்காயம்        –  10
பச்சை மிளகாய்              – 2
கடுகு, சீரகம்                      – தலா கால் டீஸ்பூன்
புளி                                         –  எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்                 – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்                       –  கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள்           –  கால் டீஸ்பூன்,
தக்காளி                                – 2,
மசித்த துவரம்பருப்பு     – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை    – சிறிதளவு,
எண்ணெய், உப்பு              – தேவையான அளவு.

செய்முறை :

முதலில் பச்சை சுண்டைக்காய்களை இலையிலிருந்து ஆய்ந்து, தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து, ஒன்றிரண்டாக அம்மில் நுணுக்கியபின்,  தயிரில் அரை மணி நேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவும்.

அடுப்பில் குக்கரை வைத்து அதில் துவரம் பருப்பை போட்டு, தண்ணீர் ஊற்றியபின்,  முடி வைத்து நன்கு வேக வைத்து 3 விசில் வந்ததும் இறக்கி வைத்து , மத்தால் நன்கு மையாக மசித்து கொள்ளவும்.

பிறகு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கியபின்,கொத்தமல்லி இலை, தக்காளியையும்  சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். மேலும் ஒரு சிறிய பவுலில் புளியை போட்டு,தண்ணீர் ஊற்றியபின்,கெட்டியாக கரைத்துக் நன்கு கொள்ளவும். பின்னர் மிக்சிஜாரில் நறுக்கிய தக்காளியை போட்டு பரபரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

மேலும் விறகு அடுப்பில் மண்சட்டியை வைத்து  சட்டி நன்கு சூடானதும், அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதனுடன் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள் போட்டு தாளித்ததும் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும்.

பின்பு வதக்கிய வெங்காயமானது நன்கு வெந்தபின், ஊற வைத்த சுண்டைக்காயை தயிரிலிருந்து நீக்கியபின், அதனுடன் சேர்த்தபின், அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டபின், அதனுடன் அரைத்த தக்காளி விழுது, ருசிக்கேற்ப உப்பு தூவி கரண்டியால் நன்கு வதக்கவும்.

அடுத்து வதக்கிய கலவையில் பச்சை வாசனை போனபின் அதனுடன் புளிக்கரைசல், மசித்த துவரம்பருப்பை  சேர்த்து, நன்கு கொதித்தபின்,கரண்டியால் நன்கு கிளறி கெட்டியானதும், நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, இறக்கி வைத்து பரிமாறினால், ருசியான பச்சை சுண்டைக்காய் குழம்பு தயார்.

Categories

Tech |