சமையலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 54 கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் மாணவ, மாணவிகள் விடுதி அறைகளில் சமையலர் பணிக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 96 சமையல் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் கள்ளர் சீரமைப்பு துறை வெளியிட்டது. இந்த நேர்முக தேர்வில் 96 பணியிடங்களுக்கு 2150 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
இதற்கு தகுதியானவர்கள் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பட்டப்படிப்பு முடித்த நூற்றுக்கணக்கான பெண்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றிருந்தது அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.