Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குடிப்பதை தட்டி கேட்ட மனைவி…” மண்ணெண்ணையை ஊற்றி கொளுத்திய கணவன்”… புதுக்கோட்டை அருகே பரபரப்பு..!!

புதுக்கோட்டையில் மது அருந்தி விட்டு வந்த கணவனை தட்டிக்கேட்ட மனைவியை கொடூரமாக எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் , அறந்தாங்கி அருகே சுனையக்காட்டைச் சேர்ந்தவர் சேகர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தவல்லி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை .கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்த சேகர் சமீபகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மாறாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  சம்பவ தினத்தன்று குடித்துவிட்டு வந்த சேகர் அமிர்தவல்லி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார்.

இப்படி குடித்துவிட்டு வருகிறீர்கள் என்று அவர் கேட்க நான் அப்படித்தான் குடிப்பேன் என்று அவர் சண்டை இட்டுள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த சேகர் வீட்டிற்குள் வைத்து சமையல் அறையில் இருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதிலிருந்து தப்பிக்க முடியாமல் தீயில் கருகிய அமிர்தவல்லி துடிதுடித்து உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 80% தீக்காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் அவர்களின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |