Categories
உலக செய்திகள்

மனைவியை பார்க்கத்தான் இப்படி செய்தேன்… நீதிமன்றத்தில் நபர் கூறிய காரணம்… நீதிபதியின் தீர்ப்பு என்ன…?

சிங்கப்பூரில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் மூன்று முறை தப்பி சென்றதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். 

சிங்கப்பூருக்கு செல்லும் மக்கள் நாட்டின் பயணத்திற்கான விதியின்படி தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சுமார் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். இந்நிலையில் சிங்கப்பூரில் Ritz-carlton Millinia என்ற பகுதியில் 52 வயதுடைய பிரிட்டனைச் சேர்ந்த நபர் Nigel Skea என்பவர் தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் இவர் ஹோட்டலில் இருந்து சுமார் மூன்று முறை தப்பி சென்றுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தன் வருங்கால மனைவியை சந்திக்க சென்றதாக ஒப்புக்கொண்டார். இதனால் Nigel Skeaவிற்கு பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று தண்டனை விதிக்கப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் வழக்கறிஞர்கள் இவரை 4 வாரங்களுக்கு சிறையில் அடைக்கவும் அபராதமாக ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் விதிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று வாதாடியுள்ளனர்.

அதே சமயத்தில் Nigel Skeaவின் வழக்கறிஞர் ஒரு வாரம் சிறை தண்டனை அல்லது அபராதம் ஏதேனும் ஒன்றை விதிக்க வேண்டும் என்று வாதாடியுள்ளார். மேலும் தற்போது வரை பிரிட்டனை சேர்ந்த எவருக்கும் சிங்கப்பூரில் கொரோனா விதிகளை மீறியதற்காக சிறை தண்டனை விதிக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |