முட்டை சாப்பிட்ட பிறகு இந்த உணவுகளை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சைவ உணவுகளும் உண்டு அசைவ உணவுகளும் உண்டு. அதில் அசைவம் சாப்பிடும் சிலர் மாமிசத்தை விரும்பாதவர்கள் முட்டை சாப்பிடுவது வழக்கம். அது பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இருந்தாலும் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. இல்லையென்றால் உயிரைப் பறிக்கும் பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
முட்டையில் சமைத்த பிறகு முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்று இணைவதால் நமது உடல் மூலக்கூறுகளை எழுதிக் கொள்வது மிகவும் கடினம். அதனால் ரத்தம் உறைந்து போக அதிக வாய்ப்புள்ளது. அதன்படி காலை நேரத்தில் முட்டை மற்றும் சோயா பாலை குடிக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. முட்டைகளில் உள்ள புரதம் சோயாபீன் பாலில் உள்ள புரதத்துடன் இணையும் என்பது அவர்களுக்கு தெரியாது. அது உடல்களில் சிதைவு பிரச்சனையையும் ஏற்படுத்துவதுடன் நமது உடலில் உறிஞ்சுவதை தடுத்து நிறுத்துகிறது.
இதனையடுத்து முட்டை சாப்பிட்ட பிறகு வாத்து இறைச்சியை சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இது குளிர்ச்சி மற்றும் இனிப்பு குணங்கள் உடையது. முட்டையில் புரதம் மற்றும் குளிர்ச்சி தந்து அதிகம் உள்ளது. ஒரே குணம் உடைய இந்த இரண்டு பொருள்களும் ஒன்றிணையும் போது அது செரிமான அமைப்பு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் முட்டை சாப்பிட்ட பிறகு அதன் வாசனையை போக்க டீ குடிப்பதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால் அவ்வாறு செய்வது மிகவும் தவறு. டீ இலைகளில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டின் உடன் சேர்வது நமது உடலுக்கு பல்வேறு ஆபத்துக்களை ஏற்படுத்தும். அதனால் குடல் இயக்கங்கள் பாதிப்படையும். எனவே முட்டை சாப்பிட்ட பிறகு இதையெல்லாம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.