கொரானாவுக்கு எதிராக பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தை செலுத்த ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயாரித்துள்ளது. அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியை மக்களுக்கு செலுத்த ஜப்பான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் ஜப்பானில் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.
G7 நாடுகளில் கடைசி நாடாக இருக்கும் ஜப்பான் காலம் தாழ்த்தியே மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே முதற்கட்டமாக 7.2 கோடி மக்களுக்கு 14.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 12.6 கோடி. இந்நிலையில் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொற்று நோய் பாதிப்பால் இதுவரை 6912 பேர் உயிரிழந்துள்ளனர்.