Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் – கமல் அறிவிப்பு…!!

மநீம சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்  அறிவித்துள்ளார்.

மேலும் நாகர்கோவில் மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்றும், ஒரு தொகுதிக்கு ஒரு முறைவிண்ணப்பிக்க ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுக கட்சியும் விருப்ப மனு அளிக்க அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |