ஆண்டு முடிவிற்கு மேலும் 318 (நெட்டாண்டுகளில் 319) நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின.
1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது.
1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் என்னுமிடத்தில் சூலு இனத்தவரால் வூட்ரெக்கர்கள் எனப்படும் பிரித்தானிய குடியேறிகள் 300 பேர் வரையில் (பெண்கள், குழந்தைகள் உட்பட) படுகொலை செய்யப்பட்டனர்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: யுலிசீஸ் கிராண்ட் டென்னிசியில் டொனெல்சன் கோட்டையைக் கைப்பற்றினார்.
1918 – லித்துவேனியா உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1923 – ஹாவர்ட் கார்ட்டர் பண்டைய எகிப்திய மன்னர் துட்டன்காமனின் கல்லறையைக் கண்டுபிடித்தார்.
1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1937 – அமெரிக்காவின் வாலஸ் கரோத்தர்ஸ் நைலோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஆல்ட்மார்க் சம்பவம்: செருமானியக் கப்பல் ஆல்ட்மார்க்கினுள் நுழைந்த பிரித்தானியக் கடற்படையினர் 299 பிரித்தானியக் கைதிகளை விடுவித்தனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: செஞ்சேனைப் படைகள் கார்கீவ் நகரினுள் நுழைந்தன.
1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
1945 – இலங்கையின் புதிய அரசியலமைப்புக்கான சோல்பரி ஆணைக்குழு முன்னிலையில் தமிழருக்கு சம உரிமைக்கான ‘ஐம்பதுக்கு ஐம்பது’ கோரிக்கை தமிழ்க் காங்கிரசு கட்சியால் முன்வைக்கப்பட்டது.[1]
1959 – சனவரி 1 இல் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
1962 – மேற்கு செருமனியின் கரைப்பகுதிகளைத் தாக்கிய வடகடல் வெள்ளத்தினால் 315 பேர் உயிரிழந்தனர். 60,000 பேர் வரை வீடுகளை இழந்தனர்.
1978 – முதலாவது கணினி அறிக்கைப் பலகை சிகாகோவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1983 – ஆத்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 75 பேர் உயிரிழந்தனர்.
1985 – இசுபுல்லா தீவிரவாத இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1986 – சோவியத் கப்பல் மிக்கைல் லெர்மொந்தோவ் நியூசிலாந்தில் மூழ்கியது.[2]
1988 – சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
1991 – நிக்கராகுவாவின் வலதுசாரித் தீவிரவாதத் தலைவர் என்ரிக் பெர்மூடெசு மனாகுவாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1996 – சிகாகோ சென்று கொண்டிருந்த தொடருந்து ஒன்று மேரிலாந்தில் இன்னுமொரு தொடருந்துடன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1998 – தாய்வானில் சீன விமானம் ஒன்று தரையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த 196 பேரும், தரையில் ஏழு பேரும் உயிரிழந்தனர்.
2005 – கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
2007 – 2000 ஆம் ஆண்டில் தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.
2013 – பாக்கித்தான் குவெட்டா நகரில் சந்தை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர்.
2014 – நேபாள விமானம் ஒன்று அர்காகாஞ்சி மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 18 பேரும் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1471 – கிருஷ்ணதேவராயன், விஜயநகரப் பேரரசர் (இ. 1529)
1514 – இரேடிக்கசு, ஆத்திரிய நிலவளவியலாளர் (இ. 1574)
1834 – ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், செருமானிய உயிரியலாளர், மருத்துவர், மெய்யியலாளர் (இ. 1919)
1909 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (இ. 1969)
1934 – தெளிவத்தை ஜோசப், ஈழத்து எழுத்தாளர்
1941 – கிம் ஜொங்-இல், வட கொரியாவின் 2வது அரசுத்தலைவர் (இ. 2011)
1945 – இல. கணேசன், தமிழக அரசியல்வாதி
1959 – இச்சான் மெக்கன்ரோ, செருமனிய-அமெரிக்க தென்னிசு வீரர்
1969 – சுப்பு பஞ்சு அருணாச்சலம், தமிழக திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர்
1977 – தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர்
1997 – பர்தீப் நர்வால், இந்தியக் கபடி ஆட்டக்காரர்
இன்றைய தின இறப்புகள்
1954 – டி. கே. சிதம்பரநாத முதலியார், தமிழக எழுத்தாளர், வழக்கறிஞர் (பி. 1882)
1956 – மேகநாத சாகா, இந்திய வானியற்பியலாளர் (பி. 1893)
1978 – சி. பி. சிற்றரசு, தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர், மேடைப் பேச்சாளர் (பி. 1908)
1988 – விஜய குமாரதுங்க, சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி (பி. 1945)
1990 – கெய்த் ஹேரிங், அமெரிக்க ஓவியர், செயற்பாட்டாளர் (பி. 1958)
1997 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1912)
2016 – புத்துருசு புத்துருசு காலீ, எகிப்திய அரசியல்வாதி, ஐநாவின் 6வது பொதுச் செயலர் (பி. 1922)
2020 – எஸ். இராமச்சந்திரன், இலங்கை மெல்லிசை, பொப் இசைப் பாடகர் (பி. 1949)