தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதையடுத்து முதல்வர் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் நாமக்கல் வளையக்காரனூரில் நடைபெற்ற அருந்ததியர் அரசியல் ஆதரவு மாநாட்டில், “சொந்த வீடு இல்லாத 50,000 பட்டியலின மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும். பொல்லானுக்கு முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்.