மதுரை மாவட்டத்தில் வசிப்பவர் ராஜா. கார் ஓட்டுநரான இவர் தந்து பெரியம்மா மகளான 10 வயது சிறுமிக்கு குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். ஆனால், சிறுமி வீடு திரும்பாததால் ராஜாவிடம் சிறுமியின் பெற்றோர் விசாரித்தபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்த விசாரணையில், காரியாபட்டி புறநகர் பகுதியில் சிறுமி தனியாக அழுது கொண்டிருந்ததாகவும், அதை கண்ட உள்ளூர் மக்கள் காவல் நிலையத்தில் சிறுமியை ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவத்தன்று குளிர்பானம் வாங்கி தருவதாக கூறி தங்கை முறை கொண்ட சிறுமியை ராஜா அழைத்து சென்றுள்ளார். அப்போது, குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். பின்னர் அதை குடித்த சிறுமிக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை பைக்கில் ஏற்றிக்கொண்ட ராஜா, காரியப்பட்டியில் பகுதியிலுள்ள ஆள் இல்லாத பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு பாதி மயக்கத்தில் இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது வலி தாங்காமல் சிறுமி சுயநினைவுக்கு வந்ததால் பதறிப்போன ராஜா சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அவனியாபுரத்துக்கு வந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.