Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்… கொத்தாக மாட்டிய கும்பல்…!!

சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறையினருக்கு சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சவுகத்அலி மற்றும் பெருமாள் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சங்கரபுரம் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் மோட்டாம்பட்டி சுடுகாடு அருகே தீர்த்தமலை மற்றும் சங்கர் பாலன் ஆகியோர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்ட காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்து அவர்களிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் நெடுமானூர் கிராமத்தில் வீட்டின் அருகே சாராயம் விற்றுக் கொண்டிருந்த கண்ணன் மற்றும் பச்சையா பிள்ளை ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 115 லிட்டர் சாராயத்தை கைப்பற்றியுள்ளனர். இதேபோல் விரியூர் கிராமத்தில் சுடுகாடு அருகே சாராயம் விற்று கொண்டிருந்த வின்சன்ட் என்பவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |