Categories
உலக செய்திகள்

“பூங்காவிற்கு வாங்க சந்திக்கலாம்”!… நம்பி சென்ற மோசடி ஆசாமி… காத்திருந்த அதிர்ச்சி..!!

லண்டனில் நபர் ஒருவர் சிறுமிகளிடம் இணையத்தளத்தில் ஆபாசமாக பேசிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

லண்டனைச் சேர்ந்த நபர் சைமன் லேண்ட்ஸ்பெர்க் என்ற 68 வயதுள்ள நபர் கடந்த 2017 ஆம் வருடத்தில் சிறுமிகள் சிலரிடம் ஈர்க்கும் விதமாக பேசி தவறாக நடந்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த வருடம் ஜூன் மாதம் இணையதளங்கள் வாயிலாக 14 வயதுடைய சிறுமிகளிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். மேலும் தனக்கு 43 வயது என்று ஏமாற்றி மிகமோசமாக அவர்களுடன் பேசி வந்துள்ளார்.

அதன்பின்பு அச்சிறுமிகளை நேரில் சந்திக்க விரும்புவதாக கூறி பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார். அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பூங்காவில் சிலர் சைமனை சுற்றிவளைத்து பிடித்தனர். அதிர்ச்சிக்குள்ளான சைமன் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் தப்ப முடியவில்லை. அதாவது சைமனின் மோசமான குணத்தை அறிந்த சிலர் திட்டமிட்டு அவரிடம் சிறுமிகள் போன்று பேசி வந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பிறகு அவர்கள் காவல் நிலையத்தில் சைமனை ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து நீதிபதி கூறியுள்ளதாவது, இணையதளத்தில் சைமன் சிறுமிகள் என்று கருதி மிக ஆபாசமாக பேசியுள்ளார். அவரின் இதுபோன்ற செயல்கள் மிகவும் ஆபத்தானது என்பதில் சந்தேகம் ஒன்றுமில்லை.

மேலும் இதுபோன்ற குற்றத்திற்காக அவர் முன்னரே சிறைதண்டனை பெற்றிருப்பது நினைவு கூறத்தக்கது. எனினும் அவர் அதே போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டுள்ளார். மேலும் செல்போன் மற்றும் கணினி வாயிலாக அவர் பேசிய தகவல்கள் அனைத்தையும் அழித்திருக்கிறார். இதனால் சைமனுக்கு 44 மாதங்கள் சிறை தண்டனை மற்றும் புதிய பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு  பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |