கர்நாடகாவில் 18 வயதுடைய கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்
கர்நாடகாவில் தக்ஷின கன்னடா மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயின்று வந்துள்ளார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அந்த மாணவியை கடந்த மார்ச் மாதம் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர் அங்குள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து அந்த மாணவியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல் அதனை செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும் நடந்ததை வெளியே யாரிடமும் கூறினால், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவதாகவும் மாணவியை மிரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வீடியோக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 மாணவர்கள் மற்றும் வீடியோக்களை வலைத்தளங்களில் பரப்பிய மற்றொரு மாணவனையும் சேர்த்து 5வது குற்றவாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வீடியோக்களை யாரேனும் பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 5 பேரும் 19 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.