Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு…. அதிமுக தலைமை கழகம் அழைப்பு..!!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24ஆம் தேதி விருப்ப மனு பெற்று கொள்ளலாம் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகம், புதுச்சேரி கேரளாவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கி வர இருப்பதால் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 முதல் பிப்ரவரி மார்ச் 5 வரை தங்களது விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் 5 மணி வரை விருப்பம் மனுகளை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.

தமிழகத்தில் 15 ஆயிரம் ரூபாய் கட்டண தொகையை செலுத்தி விருப்ப மனுவை பெறலாம் என குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரியில் 5 ஆயிரம் ரூபாயாகவும், கேரளாவில் 2000 ரூபாய் விருப்பமனு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |