Categories
சென்னை மாநில செய்திகள்

எம்டெக் மாணவர்கள் சேர்க்கை நிறுத்தம் – இன்று மீண்டும் வழக்கு விசாரணை …!!

மத்திய அரசு நிதி உதவி அளிக்கும் படிப்புகளுக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றும்படி தமிழக பல்கலைக்கழகங்கள் மறைமுகமாக நிர்ப்பந்திக்கப்படுகின்றனவா ? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.டெக். பயோடெக்னாலஜி, m-tech,  கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு  மாணவர் சேர்க்கை இல்லை என அண்ணா பல்கலை கழகத்தின் அறிவிப்பை எதிர்த்து, இந்த படிப்புக்கு நுழைவு தேர்வு எழுதி விண்ணப்பித்துள்ள மாணவிகள் சித்ரா  மற்றும் குழலி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இவ்வழக்கு நீதிபதி பி.புகழேந்தி முன்னிலையில் நேற்று  விசாரணைக்கு வந்தபோது இரு படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முடித்திருக்க வேண்டும் எனவும், இனி சேர்க்க வாய்ப்பில்லை என்றும் ஏ.ஐ.சி.டி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு  நிதி உதவி செய்யும் படிப்புகளுக்கு தமிழகத்தில் உள்ள வேறு சில பல்கலைக்கழகங்கள் மத்திய இட ஒதுக்கீட்டின்படி மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளதாகவும், அண்ணா பல்கலைகழகம் மட்டும் மாணவர் சேர்க்கையை நிறுத்தி உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு மாணவர்களுக்காக பல பல்கலைக்கழகங்கள் புதிய படிப்புகளை உருவாக்கி வரும்போது,  அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் 25 ஆண்டுகளாக நடக்கும் படிப்பை நிறுத்தி உள்ளதாக தெரிவித்தார். மேலும் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்றுமாறு நிர்ப்பந்தம் அளிக்கப்படுகிறதா ? என்றும் கேள்விகள் எழுப்பினர். இரு பிரிவுகளில் தலா 45 மாணவர்களை அனுமதிப்பதற்கான பேச்சுவார்த்தையை ஏ.ஐ.சி.டியுடன் உடனடியாக மேற்கொள்ளும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை நீதிபதி நாளைக்கு ( இன்று ? ஒத்திவைத்தார்.

Categories

Tech |